முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கு 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Villupuram court adjourns sexual harassment case against female IPS officer till 14th

பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம்.

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, பெண் ஐ.பி.எஸ் அதிகரின் வழக்கில் விசாரணைக்காக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ், முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானர்.

வழக்கு விசாரணையின் போது, இந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை தொடர்ந்து,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கு விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு நீதிமன்ற ஒத்திவைத்து என்பது குறிப்பிடத்தக்கது.