ஆள்மாறாட்டம் செய்து அக்காவுக்காக தேர்வு எழுதிய தங்கை.!

தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து

தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது.

மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி  விண்ணப்பித்து இருந்தார்.ஆனால் தேர்வை ராமலெட்சுமி எழுதாமல் அவரது தங்கை மீனாட்சி எழுதியது.விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 3-ம் தேதி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில்  அரியமங்கலம் பகுதியில் உள்ள எஸ்.ஐ.டி. கல்லூரியில் ஒரு  தேர்வு மையம் அமைக்கப்பட்டுது. இங்கு தேர்வினை எழுத மதுரையை சேர்ந்த ராமலெட்சுமி (26) விண்ணப்பித்து இருந்தார். அதன்படி ராமலெட்சுமிக்கு  தமிழ்நாடு வணிகவியல் முதுநிலை சுருக்கெழுத்து தேர்வு மையம் நுழைவு சீட்டு அனுப்பப்பட்டது.

ஆனால் ராமலெட்சுமிக்கு தேர்வு எழுதுவதற்கு பதிலாக அவரது  தங்கை மீனாட்சி(23)  தேர்வு எழுதி உள்ளார்.அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் நுழைவு சீட்டில் மீனாட்சி புகைப்படத்தை ஒட்டி தேர்வு எழுதியது தெரியவந்தது.

இது தொடர்பாக சென்னையில் விசாரணை நடைபெற்றது.இந்நிலையில்  நேற்று முன்தினம் ஆள்மாறாட்டம் செய்ததால்  உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி  திருச்சி நந்திகோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு வணிகவியல் நிறுவன சங்கம் சார்பில்   அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகாரின்பேரின் அரியமங்கலம் போலீசார் மீனாட்சி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.