எங்கள் எடப்பாடி அண்ணன் போல வேட்டியை மடித்து கட்டு! வயலுக்குள் இறங்கு! – முன்னாள் அமைச்சர் வளர்மதி

AIADMK ex-minister Valarmati told a meeting of executives in Chennai that the real heirs of the MGR are the AIADMK.

சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர்,  வேலைவெட்டி இல்லாத நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் எடப்பாடி அண்ணன் போல வேட்டியை மடித்து கட்டு, வயலுக்குள் இறங்கு என எடப்பாடி அவர்களே எடுத்துக்காட்டாக பேசியுள்ளார்.

மேலும், வேலை கிடையாது, படம் கிடையாது, சூட்டிங் கிடையாது, இனி நடித்தாலும் அந்த படத்தை பார்ப்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவதாக விமர்சித்துள்ளார்.