சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மனு மீதான விசாரணை பிப்ரவரி 6-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அதிமுக ஆட்சியில் கடந்த 2001முதல் 2006 சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி இருந்தார். அப்போது அவரும் அவரது குடும்பத்தினர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2012ஆம் ஆண்டு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பா.வளர்மதி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டது. இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் […]
புதிதாக கட்சி தொடங்கி விட்டு சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக கமலஹாசனை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் சாடியுள்ளார். தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிதாக துவங்கியுள்ள கட்சிகளும் தங்களது வாக்குகளை சேகரிப்பதற்காக தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி விட்டனர். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை சாடி தங்களது கட்சிகளை பெருமைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இன்று […]
சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், வேலைவெட்டி இல்லாத நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர் என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் […]
அடாவடி தி.மு.க. ஆட்சிக்கு வர முடியாது – முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி கடும் தாக்கு… சென்னை. அடாவடி தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என்று மக்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று சைதாப்பேட்டையில்நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி பேசினார். அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு, தென்சென்னை தெற்கு மாவட்டம், சைதாப்பேட்டை பகுதி கழகம் சார்பில் வி.ஜி.பி. சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் , முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் […]