மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் இரு மகன்கள் பலி ...!

The father and three sons who went to save him were killed in an electric shock near Dindigul.

திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 வயதுடைய விஜய் கணபதி ஆகிய இரு மகன்களும் மின்சாரம் தாக்கி உயிர் இழந்துள்ளனர். மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.