கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை முதல் அதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், குறிப்பாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விடவிய விடிய வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இந்த கனமழையால் சென்னை ஒரு தீவு திடலாக காட்சியளிக்கிறது, பார்க்கும் இடம்மெல்லாம் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக உள்ளது. இந்த சூழலில் சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கம் சற்று குறைந்து, மழை நின்றுள்ளது. மிக்ஜாம் புயலானது […]
தருமபுரி சந்தைப்பேட்டை அருகேஇரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு. தருமபுரி சந்தைப்பேட்டை அருகே இலியாஸ் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில், தனது வீட்டை காலி செய்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது பீரோவில் மின்கம்பில் உரசியதால் மின்சாரம் தாக்கி உள்ளது. மின்சாரம் தாக்கியதில், பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய படுகாயம் அடைந்த குமார் என்பவர் தர்மபுரி அரசு […]
திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற போது 2 பேர் உயிரிழந்துள்ளனர்.சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயன்றபோது ஏழுமலை என்பவரும்,சரண்ராஜைக் காப்பாற்ற வந்த ரேணுகோபால் என்பவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் மீதான நிலத்தகராறு முன்விரோதம் காரணமாக அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொலை செய்ய முயன்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறபபடுகிறது. இதனையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரது உடலையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு […]
திண்டுக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் தந்தை மற்றும் அவரை காப்பாற்ற சென்ற இரு மகன்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர். திண்டுக்கல் அடுத்த செட்டியபட்டி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய 45 வயதுடையவர் தான் திருப்பதி. இவர் மின்கசிவு இருப்பது தெரியாமல் சுவர் ஒன்றை தொட்டுள்ளார். இதனையடுத்து, அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. திருப்பதியை மின்சாரம் தாக்கியது அறிந்த அவரது மகன்கள் தங்களது தந்தையை காப்பாற்றுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில், தந்தையை காப்பாற்ற சென்ற 15 வயதுடைய சந்தோஷ்குமார் மற்றும் 17 […]
அசாம் மாநிலத்தில் யானை ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் உள்ள கம்ரூப் எனும் மாவட்டத்தின் மிர்சா எனும் பகுதியில் நெல் வயலைச் சுற்றி மின்சார வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளது. இந்த மின்சார வேலியில் உரசிய யானை ஒன்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்த யானை உயிரிழந்து கிடப்பதைப் பார்த்த உள்ளூர்வாசிகள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் வன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு […]
வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் காஞ்சிரங்கால் கிராம மக்களை பாராட்டினார். மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் தெரிவித்து, பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. இதுபோன்ற பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்து செல்லவேண்டும். நாம் நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொண்டாட வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு […]
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள், அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் […]