சென்னை :கரூர் தவெக பரப்புரையில் என்ன நடந்தது என்பது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். சதி நடந்திருப்பதாக தவெக தரப்பு கூறி வரும் நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமுதா ஐஏஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் செய்தியாளர் சந்தித்து விளக்கம் கொடுத்துள்ளனர்.
அதன்படி, ”விஜயின் பிரச்சாரத்தின் போது மின் விநியோகம் நிறுத்தப்படவில்லை என்றும், பிரச்சார கூட்டம் நடக்கும்போது மின்விநியோகத்தை நிறுத்துமாறு தவெகவினர் மனு அளித்திருந்ததாகவும், ஜென்செட் பகுதிக்குள் தொண்டர்கள் நுழைந்ததால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஃபோகஸ் விளக்கு அணைந்தது” இரு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பக பேசிய கூடுதல் தலைமைச் செயலாளரும், அரசின் செய்தி தொடர்பாளருமான அமுதா, ”ஜெனரேட்டரை சுற்றியுள்ள தகடுகளை தவெகவினர் பிரித்துச் சென்றதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது, தவெக துண்டு அணிந்தவர்தான் மின்சார ஜெனரேட்டரை ஆஃப் செய்தனர்” என்றார்.
