"பாஜகவிடம் கைகட்டி நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி"- மு.க.ஸ்டாலின்!

DMK leader MK Stalin said that Chief Minister Edappadi Palanisamy is shaking hands and standing by the BJP.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க.விடம் கைகட்டி நிற்பதாக “தமிழகம் மீட்போம்” என்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், “தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை  நடத்திவருகிறார். அந்தவகையில், தஞ்சாவூரில் இன்று நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

அப்பொழுது பேசிய அவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  காவேரி பிரச்சனைக்கு தீர்வு காணாமல் பாஜகவிடம் கைகட்டி நிற்பதாகவும், டெல்லியில் போராடும் விவசாயிகளை “தரகர்கள்” என கூறிவருவதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், கொரோனா ஊரடங்கின் போது மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை வெளிச்சந்தையில் விற்று ஊழல் செய்தவர், அமைச்சர் காமராஜ் என தெரிவித்துள்ளார்.