நிவர் புயல் எதிரொலி! சென்னை மக்கள் புகாரளிக்க இந்த என்னை தொடர்பு கொள்ளவும்!

The people of Chennai can lodge complaints on 1913, 044-2538 4530 and 044-2538 4540 regarding the damages caused by the Nivar storm.

சென்னை மக்கள், நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1913 என்ற எண்ணிலும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக  உருவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை தேங்கி உள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, சென்னை மக்கள், நிவர் புயல் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1913 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்றும், 044-2538 4530, 044-2538 4540 என்ற அவசர எண்களிலும் மக்கள் புகாரளிக்கலாம் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.