கனமழை எதிரொலி : 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Extreme levels of flood danger were announced in at least 21 places.

கனமழை காரணமாக 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்ட நெருங்கி விட்டது. ஏரியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் எந்நேரத்திலும் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதாகவும், இன்று இரவு அல்லது நாளை மதுராந்தகம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் மதுராந்தகம் ஏரியை சுற்றியுள்ள 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.