கனமழை காரணமாக 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்கி உள்ளதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, கன்னியாகுமரி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்ட நெருங்கி விட்டது. ஏரியில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் எந்நேரத்திலும் மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை […]
கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய ஆட்சேபனை இல்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்பாக்கத்தை சுற்றி 14 கிராமங்களில் பத்திரப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டாம் என கடந்த 19-ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலைய கதிர்வீச்சிக்கு உட்பட்ட 14 கிராமங்கள், பேரூராட்சிகளில் பத்திர பதிவுக்கு ஆட்சேபனையில்லை என தற்போது அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அரசிதழில் குறிப்பிட்டுள்ள சர்வே எண் இடங்களை பத்திரப் பதிவு மேற்கொள்வதற்கு ஆட்சேபனை இல்லை என அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காட்டமாக தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ள ராகுல் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபடும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்: இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி […]
துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் அனுமதியின்றி செயல் படும் கல்குவாரியல் அப்பகுதி மக்கள் செவித்திறன் இழக்கும் அளவிற்கு பாதிப்பு அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தின் வடகோடி எல்லையில் அமைந்துள்ள நரசிம்மபுரம், பாறைப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு முக்கிய தொழிலாக விளங்குவது விவசாயமும் ,கால்நடைகள் வளர்ப்பதும் ஆகும். இந்த கிராமங்கள் முழுவதும் வானம் பார்த்த பூமி. இந்த நிலையில் சிப்பிப்பாறையை என்ற இடத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் நரசிம்மபுரத்தில் 2013ம் ஆண்டு ஒரு ஏக்கர் 25 சென்ட் நிலப்பகுதியில் குவாரி அமைக்க அனுமதி பெற்றதாகவும், […]