தூத்துக்குடியில் கனமழை எதிரொலி : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Heavy rains over the past one week in Thoothukudi have caused floods in various parts of the state, Nature's life is affected.

தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக விடாது கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுவதுடன், பலரது குடியிருப்புகளுக்குள்  வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் உறங்குவதற்கு கூட இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், முத்தம்மாள் காலணியிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதற்கு படகுகளை காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இது தவிர பிரையண்ட் நகர், எஸ்.என்.ஆர் நகர் உள்ளிட்ட இடங்களில் எல்லாம் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. முத்தம்மாள் களனி மக்களுக்கு வெளியில் சென்று வர வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதால் அங்கு உள்ள மக்கள் சற்றே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.