சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வருகிற 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வட […]
தூத்துக்குடியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தூத்துக்குடியில் கடந்த சில தினங்களாக விடாது கொட்டி தீர்த்த கனமழையால் பல இடங்களில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுவதுடன், பலரது குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் உறங்குவதற்கு கூட இடமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், முத்தம்மாள் காலணியிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வெளியேறுவதற்கு படகுகளை […]
நேபாள நாட்டு பிரதமர் சர்மா ஒலியின் முதன்மை செயலாளர் மற்றும் செயலகத்தில் பணியாற்றும் 5பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாள பிரதமர் அலுவகத்திலிருதுவெளியான தகவல்: நேபாள பிரதமரின் அரசியல் ஆலோசகர் பிஷ்னு ரீமல், ஊடக ஆலோசகர் சூர்யா தபா, வெளிவிவகார ஆலோசகர் டாக்டர் ராஜன் பட்டாராய் ஆகியோர்க்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் ஒலியின் முதன்மை செயலாளர் இந்திரா பண்டாரி மற்றும் செயலகத்தின் புகைப்படக்கலைஞன் ராஜன் காப்ளே ஆகிய 2 அதிகரிகளுக்கும் கொரோனா தொற்று […]