சென்னை: விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் விக்கிரவாண்டி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விக்கிரவாண்டி அருகே ஒருவழிப் பாதையாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், டோல்கேட் பகுதி தனித் தீவு போல் மாறியுள்ளது, சுமார் 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், தேவையற்ற […]
கடலூர்: கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் தரைப் பகுதியில் 6 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதுவரை 18 செ.மீ., மழை பதவாகியுள்ளது. கடலூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொது […]
சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் […]
அமெரிக்கா : வட-மத்திய அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்ட நிலையில், குறைந்தது 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அயோவாவில் ஒருவரும், தெற்கு டகோட்டாவில் ஒருவரும் இறந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இவர்களுடைய உடல்களை மீட்க முடியவில்லை என மீட்பு துறையினர் தகவலை தெரிவித்துள்ளனர். கிழக்கு நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டாவிலிருந்து அயோவா மற்றும் மினசோட்டா வரையிலான பகுதியில், கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக […]
இலங்கை : நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 87,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த கனமழை வெள்ளத்தால் தென் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கனமழையால் வீடுகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி, மாத்தறையில் 4 பேர், இரத்தினபுரியில் 5 பேர் மற்றும் கொழும்பில் 3 பேர் உட்பட மொத்தம் 12 உயிரிழப்புகளும், 5 பேர் […]
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளன. ஐ.நா வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, கென்யாவில் கனமழைக்கு இதுவரை 32 பேர் பலியாகியுள்ளனர். கென்யாவில் மார்ச் மாத இறுதியில் இருந்து கனமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த வாரத்தில் பெய்த மழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெரிய வெள்ள அபாய ஏற்பட வழி வகுத்தது. […]
திருச்சி விமான நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான முனைய திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள திருச்சி விமான நிலையத்தின் இரண்டாவது புதிய முனையத்தை திறந்து வைத்தார். முன்னதாக புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து கேட்டறிந்தார் பிரதமர். இதையடுத்து, ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கியும், அடிக்கல் நாட்டியும் வைத்தார் பிரதமர் மோடி. இந்த நிகழ்வின்போது, மத்திய அமைச்சர் […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் […]
பெங்களூருவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 397 கி.மீ சாலைகள் சேதமடைந்ததால் ₹337 கோடி இழப்பு. பெங்களூருவில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 397 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்தன. கிட்டத்தட்ட ரூ.337 கோடி மதிப்பிலான சேதத்தை வெள்ளம் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிபிஎம்பியின் படி, மூன்று கிலோமீட்டர் வரையிலான நடைபாதைகள் சேதமடைந்து ₹4 கோடி இழப்பு ஏற்பட்டது. வெள்ளத்தின் போது 7,700 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 170 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளத்தால் மகாதேவபுரா பகுதி மிக […]
பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை மற்றும் வெள்ள பெருக்கு காரணமாக 1000க்கு மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த கடுமையான வெள்ளத்தால் அதிகப்படியான பொருளாதர சேதத்தையும் பாகிஸ்தான் கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது வெள்ளத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளின் மதிப்பு சுமார் 18 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வெள்ளத்திற்குப் பிறகு விவசாயத்தின் […]
வங்கதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றக் கூடிய பணியில் மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கனமழை காரணத்தினால் ஆற்றின் கரை உடைந்து விட்டது. இதனால் அதன் அருகில் உள்ள பல்வேறு […]
மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தமிழக முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது,மழை நீரை அகற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், மழை நீரில் பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை […]
ஆந்திரா:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால்,குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து,நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் […]
சென்னை:மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த வாரம் பெய்த மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.குறிப்பாக,சென்னையில் வீடுகள்,சாலைகள் எனப் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்மோட்டார் மூலமாக மழை நீர் வெளியேற்றப்பட்டு இயல்பு வாழ்க்கையை நோக்கி மக்கள் திரும்புகின்றனர்.இதற்கிடையில்,மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சென்னையில் […]
சென்னை:தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெய்துள்ள மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிகாரிகளுக்கு மீண்டும் பாடம் கற்பித்துள்ளது என்றும்,அதை முறையாகக் கற்று அடுத்தடுத்த மழைக் காலங்களில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாதி நாள் தண்ணீருக்காகவும்,மீதி நாட்கள் தண்ணீரிலும் தவிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும்,சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற […]
தாம்பரம்:மழை வெள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு 8 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.இதனையடுத்து,மீண்டும் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குளாகி […]
வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்க நாடான வெனிசுலா நாட்டில் உள்ள மரிடா எனும் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், வீடுகள் மற்றும் சாலைகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2,250க்கும் மேற்பட்ட […]
துருக்கி நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை அன்று துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் பார்டின், கஸ்டமோனு, சினோப் மற்றும் சம்சுன் ஆகிய இடங்களில் பெரிதளவு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், பாலம் உள்ளிட்டவை இடிந்து விழுந்துள்ளது. இதில் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 1,700க்கும் மேற்பட்ட மக்களை […]