தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழகத்தில் கொரோனவால் 18-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் இன்று முதல் 21 நாள் ஊரடங்கை பிரதமர் அறிவித்தார்.
unknown nodeஇந்நிலையில் தமிழகத்தில் 8-வது கொரானா பரிசோதனை ஆய்வகத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.