அதிமுக-தேமுதிக இடையே குழு அமைத்து பேச்சுவார்த்தை: பிரேமலதாவை சந்தித்த எஸ்.பி. வேலுமணி பேட்டி

ADMK alliance: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன்

Featured image

ADMK alliance: சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் வருகை தந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலில் கூட்டணி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் அதிமுக – தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை முதற்கட்டமாக தொடங்கியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் இல்லத்திற்கு அதிமுக மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.

Read More –மக்களவை தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை கொடுத்த அதிரடி அறிவிப்பு!

இதன்பின்னர் முன்னாள் அமைச்சரும், கொங்கு மண்டல அதிமுக பொறுப்பாளருமான எஸ்.பி வேலுமணி செய்தியாளரளை சந்தித்தார். அவர் பேசும் போது, “எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்துப் பேசினோம், நேரில் வந்து சந்தித்ததை வைத்து நீங்களே கூட்டணி முடிவாகிவிட்டதா என்பதை புரிந்து கொள்ளுங்கள். பிரேமலதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். இரு தரப்பிலும் குழு அமைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.