இன்று முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் மளிகை பொருள்களுக்கான டோக்கன் வினியோகம்!

- இன்று முதல் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கப்படுகிறது.
- ஜூன் 15 ஆம் தேதி நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்படும் என அறிவிப்பு.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கின் பொழுது என்பது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட போதே நிவாரணமாக ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இதன்படி ஏற்கனவே முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில் இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கியுள்ள தொகுப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை மூன்றாம் தேதி முதல்வர் துவக்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான டோக்கன் இன்று முதல் ஜூன் 14-ம் தேதி வரை வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான டோக்கன்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், ஜூன் 15ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் நிவாரணம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2.11 கோடி குடும்பத்தினர் தமிழகம் முழுவதிலும் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025