மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கப்படி வட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பகுதிகளை இன்று ஆய்வு செய்த பின் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை அறிவித்தது தமிழ்நாடு அரசு. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், வடகிழக்கு பருவமழையால் இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அமைச்சர், வீடுகளுக்கு தண்ணீர் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,800 நிவாரணம் வழங்கப்படும். மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் ரூ.5,000 வழங்கப்படும் என்றார். மேலும், மழையால் குடிசை பகுதி அளவு இடிந்திருந்தால் ரூ.4,100 வழங்கப்படும் என்றும் மழையால் கான்கிரீட் வீடு […]
கடலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம் வழங்கிய முதலமைச்சர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு அதி கனமழை கொட்டி தீர்த்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவாக 44 செ.மீ மழை ஒரே நாளில் பதிவானது. கனமழையால், விலை நிலங்கள் […]
திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண தொகையாக 2000 ரூபாய் ஏற்கனவே முதல் தவணையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் […]
இன்று முதல் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புக்கான டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஜூன் 15 ஆம் தேதி நிவாரணத்தொகை மற்றும் மளிகை பொருட்கள் வினியோகிக்கப்படும் என அறிவிப்பு. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கின் பொழுது என்பது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட போதே […]
மும்பை அருகேயுள்ள நடுக்கடலில் கப்பல் ஒன்று மூழ்கியதில் 86 பேர் மாயமாகி உள்ளனர். இதுவரை 51 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் கிணறு அருகே என்னை துரக்கும் பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்த b-305 எனும் கப்பல் அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் கடந்த திங்கள் கிழமை இரவு கரையை கடக்கும் பொழுது கப்பல் நங்கூரத்தை இழந்துள்ளது. அதே நேரம் கடல் கொந்தளிப்பும் […]
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பின் நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அறிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தான் இம்முறையும் வெற்றி பெற்றுள்ளார்கள். தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவி வகித்துள்ள மம்தா பானர்ஜியின் வெற்றியை அம்மாநிலத்தில் உள்ள திரிணாமுல் […]
புயலால் அதிகம் பாதிப்படைந்த சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார். வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதையடுத்து சென்னையின் பல்வேறு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுடன் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை திமுக […]
தெலுங்கானா வெள்ள நிவாரணத்துக்காக நடிகர் மகேஷ் பாபு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் மக்கள் அழிந்து வரக்கூடிய சூழ்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், பல்வேறு ஏழை எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதுடன் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். எனவே, தெலுங்கானா […]
இப்போது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல, நிவாரணம் தான் என பிரதமர் உரை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றுவதாக கூறியதும் ,மக்கள் நிவாரண உதவிகளை பிரதமர் மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதுடன், வேலை இல்லாத் திண்டாட்டம் ,பொருளாதார வீழ்ச்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றம் என […]
பெய்ரூட் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கிய இந்தியா. லெபனானின் பெய்ரூட் துறைமுக நகரத்தில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பால், அப்பகுதியே உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. இந்த சம்பவத்தில் குறைந்தது 135 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5,000 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிடுவையடுத்து, மருத்துவ மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 58 மெட்ரிக் டன் அவசரகால மனிதாபிமான உதவிகளை, இந்தியா லெபனானுக்கு வெள்ளிக்கிழமை வழங்கியது. இந்த நிவாரண பொருட்களில், கோதுமை மாவு, சர்க்கரை மற்றும் பருப்பு வகைகள் […]
மலர் விவசாயிகளுக்கு ஒரு முறை ஹெக்டேருக்கு ரூ .25000 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார். நாடுமுழுவதும் பரவிய கொரோனாவால் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களின் நலனுக்காக 1,610 கோடி ரூபாய் நிவாரண திட்டத்தை கர்நாடக அரசு இன்று அறிவித்தது. அதில், விவசாயிகள், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், நெசவாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் நபர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 230,000 முடிதிருத்தும் நபர்களுக்கும், 775,000 ஓட்டுநர்களுக்கும், […]
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்தி 39 ஆயிரத்தி 495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கப்படுவதாகவும், 99 சதவீத வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்திற்கு பிறகு நடத்தப்பட்ட கஜா புயல் குறித்த விவாதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்பொழுது, கஜா புயலால் சேதமடைந்த படகுகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாயாக நிவாரண நிதியை உயர்த்தி தர உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கஜா புயல் […]
கஜா புயலால் பாதித்த மக்களின் கோபம் உணர்ந்து அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது. இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு […]