தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – உயர்நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாரை தண்டிக்கக்கோரி தோனி கோரிக்கை.
கடந்த 2013 ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீது, தோனி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பத் குமார் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முந்தைய அவதூறு வழக்கில் சம்பத் குமார் தாக்கல் செய்த பதில் மனுவானது நீதிமன்ற உத்தரவு மீது களங்கம் ஏற்படுத்துவதால், அவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் தண்டிக்கக்கோரி முன்னாள் இந்திய அணி வீரரும், ஐபிஎல்லில் சென்னை அணி வீரருமான தோனி உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.