தர்மபுரியில் 5 வாகனங்கள் மோதிக் கொண்ட கோர விபத்து..! மூவர் உடல் கருகி பலி

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை

Featured image

தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன் பக்கம் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மோது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுக்கியது. இச்சம்பவத்தில் மூன்று பேர் உடல் கருகி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய வாகனங்கள் அனைத்தும் தீயில் கருகிய நிலையில் இதன் காரணமாக சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவில் கட்டினால் ஓட்டு போடுவார்களா? ராமர் கோவில் குறித்து மெளனம் கலைத்த எடப்பாடி பழனிச்சாமி

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தர்மபுரி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.