கள்ளக்காதல் விவகாரம்.! துணை நடிகரை கொன்ற துணை நடிகை கைது.!

- துணை நடிகர் ரவி , டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்த தேவி என்பவருடன் திருமண மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
- ரவி உடன் தனது திருமண மீறிய உறவுவை தேவி துண்டித்து விட்டார்.ரவி , தேவி தொடர்பை கைவிடாமல் போன் செய்து தொந்தரவு செய்து வந்து உள்ளார்.
மதுரையைச் சேர்ந்தவர் ரவி (38). இவர் சினிமா வாய்ப்பு தேடி 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து உள்ளார்.அப்போது அவர் வடபழனியில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்து உள்ளார். ஆனால் அவருக்கு துணை நடிகர் வாய்ப்பு மட்டுமே நடிக்க கிடைத்தது.
இந்நிலையில் கொளத்தூர் ராஜமங்கலத்தில் வசித்து வந்த டி.வி. தொடர்களில் துணை நடிகையாக நடித்து வந்த தேவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் கள்ளக்காதலாக மாற தேவிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இதனால் தேவி தனது குடும்பத்துடன் தேவியின் தனது மகன்கள் வளர்ந்து விட்டதால் ரவி உடன் தனது கள்ளக்காதலை தேவி துண்டித்து விட்டார். இதனால் 2 வருடங்களாக ரவியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்ல.
ஆனால் ரவி , தேவி தொடர்பை கைவிடாமல் போன் செய்து தொந்தரவு செய்து வந்தார். இதனால் தேவி சில நாள்களுக்கு முன் குடும்பத்துடன் வடக்கு கொரட்டூர் பகுதிக்கு சென்று விட்டார். அப்போது தனது செல்போன் நம்பரையும் தேவி மாற்றி உள்ளார்.
பின்னர் தேவியின் தங்கை லட்சுமி வீட்டிற்கு சென்று அங்கு தேவி பற்றி கேட்டு உள்ளார். ஆனால் தனக்கு தேவி பற்றி தெரியாது என லட்சுமி கூறியுள்ளார்.இதனால் ரவி, லட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
லட்சுமி தேவிக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.பின்னர் தேவி தனது கணவர் சங்கருடன் அங்கு வந்து உள்ளனர்.அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவி அவர் கணவர் , மற்றும் லட்சுமி அவருடைய கணவர் ஆகிய 4 பேரும் சுத்தியலால் ரவியை தாக்கி உள்ளனர்.கை, கால்களை கட்டி போர்வையால் அவரது கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசார் ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதையடுத்து துணை நடிகை தேவி உட்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025
பாகிஸ்தானை விட நாங்க தான் கெத்து! முன்னாள் இந்திய வீரர் ஓபன் ஸ்பீச்!
February 22, 2025