பப்ஜி மதன் மீதான வழக்கில் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது.
பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கீர்த்திகா மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் 32 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் தகவல் உள்ளதாக கூறப்படுகிறது.
150க்கும் மேற்பட்டோர் புகார் அளித்த நிலையில், 32 பேர் மட்டும் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். கொரோனா காலத்தில் உதவி செய்வதாக 2,848 பேரிடம் ரூ.2.89 கோடி பெற்றதாக பப்ஜி மதன் மீது குற்றசாட்டியுள்ளனர்.இதனிடையே, ஆபாசமாக பேசி வீடியோ செய்த வழக்கில் பப்ஜி மதனை காவல்துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.