MandousCyclone: தீவிர புயலாக உருவெடுத்த மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை
வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக உருவெடுத்து 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மாண்டஸ் புயலானது காரைக்காலிலிருந்து 240 கிமீ தொலைவில் வட மேற்காக நகர்ந்து வருகிறது.
இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர கடற்கரையை புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே 65-75 கிமீ வேகத்தில் டிசம்பர் 09 நள்ளிரவு முதல் டிசம்பர் 10 அதிகாலை வரை காற்று வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.