சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!!வீரர்கள் உயிரிழப்பு !!சத்குரு கடும் கண்டனம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

unknown node

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

unknown node

இது தொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில்  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்ட கண்டன செய்தியில்,வீரம் நிறைந்த நம் படைவீரர்களின் உயிர் வீணாக்கப்பட்டது. இதுபோன்ற கோழைத்தனமான செயல் செய்வோரை உறுதியோடும் கண்டிப்போடும் கையாள வேண்டும். முடிவெடுப்பதில் உள்ள குறைபாட்டினால் நம் நாடு பெரும் விலை கொடுத்து வருகிறது.இவ்வாறு தனது  ட்விட்டர் பக்கத்தில்  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.