தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 750 பேருக்கு கொரோனா ; உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா ...?

In Tamil Nadu, 750 people have been diagnosed with corona infection in the last 24 hours and 13 have died.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து இருந்தாலும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 750 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,21,021 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,388 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 843 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.