“இவர்கள்தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை:தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் 19 வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: “சென்னையில் 1600 இடங்களில் காலை 9 … Read more

கொரோனா மரணம்…இவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

சென்னை:கொரோனா தடுப்பு பணியின் போது,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தூய்மை பணியாளர்கள் 2 நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா நோய் தடுப்புப் பணியின் போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஜெ.மௌனதாஸ் மற்றும் கு.இராஜேந்திரன் ஆகிய இரண்டு தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து,நிவாரண உதவியாக தலா ரூ.25 லட்சம் வீதம் என மொத்தம் … Read more

இனியும் கால தாமதம் செய்தால், வீதியில் இறங்கி போராடுகின்ற சூழல் ஏற்படும் – EPS எச்சரிக்கை!

கொரனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 750 பேருக்கு கொரோனா ; உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா …?

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 750 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து இருந்தாலும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 750 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,21,021 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,388 ஆக … Read more

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் அது கொரோனா மரணம்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தற்கொலை செய்து கொண்டால் அது கொரோனா மரணமாகவே கருதப்படும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா வால்  உயிரிழந்தவர்களுக்கு 50 ஆயிரம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது என … Read more

#Breaking:கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பம்;தலா ரூ.50000 வழங்க பரிந்துரை..!

கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் பரிந்துரைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில அரசுகள் ,மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிவாரண நிதி தொடர்பான வழக்கில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் இறப்பு சான்றிதழை வைத்திருக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க … Read more

கொரோனா உயிரிழப்பு;ரூ.8.5 கோடி நிதி விடுவித்து – அரசாணை வெளியீடு

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள்,செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு முன்னதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில்,கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் & மருத்துவப் பணியாளர்களின் 34 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க,ரூ.8.5 கோடி நிதி ஒதுக்கி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை … Read more

கொரோனாவால் இறந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் – மத்திய அரசு..!

கொரோனாவால் இறந்த 101 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த 101 பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ .5 லட்சம் உதவி வழங்க ரூ. 5.05 கோடியை அரசு அங்கீகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்களவையில் இன்று தெரிவித்துள்ளார். மக்களவையில் எம்.பி.ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பவார், … Read more

கேரளாவில் புதிதாக 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 22,414 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கேரளாவில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,212 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 19,478 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,77,788 பேர் வீடு திரும்பியுள்ளனர். … Read more

இவர்கள்தான் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளனர்-எய்ம்ஸ்..!

எய்ம்ஸ் ஆய்வில் 50 வயதிற்கும் குறைவானவர்கள் அதிகளவில் கொரோனாவால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் அளித்த அறிக்கையில், கொரோனாவால் அதிக உயிரிழந்தோர் எந்த வயதினர் என்பதை குறித்த ஆய்வு கடந்த 2020 ஏப்ரல் 4 முதல் ஜூலை 24 வரையிலான காலத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் அடிப்படையில் 65 வயதினரை விட 50 வயதினருக்கும் குறைவானவர்களே அதிகமாக இறந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதன்படி, மருத்துவமனையில் 654 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொரோனாவின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 247 … Read more