தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 1173 ஆக உயர்வு.!

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 1075 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு 1173 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 58 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 33,850 பேர் வீட்டு கண்காணிப்பில் இருக்கின்றார்கள் என்றும் 136 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர் என கூறியுள்ளார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 63,380 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 12,746 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 1,173 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 208, கோயம்பத்தூரில் 126, திருப்பூரில் 78, ஈரோடு 64, திண்டுக்கல், திருநெல்வேலி தலா 56 போன்ற மாவட்டங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

unknown node