முதல்வரின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அவரது தாயார் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அவரது தாயார் மறைவுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் தாயார் படத்திற்கு மலர்தூவி மரியாதையை செலுத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார், உடலநலக்குறைவால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 13-ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.