“முதல்வர், துணை முதல்வர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பார்கள்!”- அமைச்சர் சி.வி.சண்முகம்

Default Image

முதல்வர், துணை முதல்வர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பார்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதன்படி, அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என ஆக்டோபர் மாதம் 7 ஆம் தேதி அறிவிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இந்த செயற்குழு கூட்டம் நடந்த தினம் முதல் இருந்தே தமிழக அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலை சந்திப்பார்கள் எனவும், அவர்கள் தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்