அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொண்டாடிய ஓபிஎஸ், விழாவில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ் தலைமையிலான அணியினர், அதிமுக தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். அதே போல, […]
சென்னையில், பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த பெரியார் புகைப்படத்தை இபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றதால், அமமுகவினர் வைத்திருந்த பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ். இன்று தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் கொண்டாப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியினர் தங்கள் மரியாதையை பெரியார் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர். பலர் சமூக வலைத்தளம் மூலம் பெரியாரின் கருத்துக்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை அண்ணாசாலையில் […]
இன்னோர் கட்சியில் நடக்கும் கூத்து பற்றி நாம் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. சிலரின் பதவி வெறி, சுயநலத்தால் இப்படி இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் – என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி விவகாரம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவினரும் மாறி மாறி நீதிமன்றம் சென்று, தீர்ப்பு, மேல்முறையீடு என சென்று சென்று கொண்டிருக்கின்றனர். […]
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஏற்கனவே, ஓபிஎஸ் தரப்பில் கேவியெட் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுக சார்பிலும் கேவியெட் மனு தக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூலை 11 நடந்த அதிமுக பொதுக்குழு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக மாறி வருகிறது. சென்னை நீதிமன்றத்தில் ஒற்றை நீதிபதி அமர்வு பொதுக்குழு செல்லாது என்றும், இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு பொதுக்குழு செல்லும் எனவும் மாறி மாறி தீர்ப்பளித்தனர். தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து ஏற்கனவே […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில்,அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும்,கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும், பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும்,குறிப்பாக, அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் […]
அதிமுக உட்கட்சி தேர்தல் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நிலையில் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்,இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.ஆனால்,இதனை எதிர்த்து வழக்கு தொடர அனுமதிக்க கோரி கே.சி.பழனிசாமி மகனான சுரேன் பழனிசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது:தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்,அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டது,கட்சியின் விதிகளுக்கு எதிரானது என்றும், ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் […]
ஒற்றைத் தலைமை பிரச்சனையால் அதிமுகவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில்,சென்னை தியாகராய நகரில் இருந்து புரட்சிப் பயணம் என்ற பெயரில் தனது அரசியல் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஆன்மீகப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் ஓராண்டுக்கு பிறகு தற்போது அரசியல் பயணத்தை சசிகலா தொடங்கியுள்ளார். அந்த வகையில்,சென்னையிலிருந்து திருத்தணிக்கு செல்லும் சசிகலா, அங்குள்ள எம்ஜிஆர்,அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்க உள்ளார் என்றும்,அதன்பிறகு கட்சி தொண்டர்களை சந்தித்து பல்வேறு விசயங்கள் குறித்து பேசவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதிமுகவில் […]
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 23.6.2022 (வியாழக் கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில், தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள நிலையில்,அதிமுகவில் ஒற்றை தலைமை பெரும் பிரச்சனையாக வெடித்துள்ளது.இதனால்,ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனி ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். இதனிடையே,அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ள நிலையில்,ஒற்றை தலைமை கோரிக்கை காலத்தின் கட்டாயம் […]
சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இக்கூட்டத்தில்,புதிய அவைத்தலைவர்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்,உட்கட்சி தேர்தல் ஆகிய முக்கிய விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து,அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு பிறகு யாரும் தேர்வு செய்யப்படாத காரணத்தால் அப்பதவி காலியாக உள்ளதையடுத்து, […]
சென்னை:அதிமுக தலைமை அலுவலகத்தில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தொண்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக […]
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இந்நிலையில், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது. இதனால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த வகையில்,எதிர்க்கட்சியான அதிமுக […]
துணை முதல்வர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி சந்தித்தார். அதிமுகவில் 50 நாட்களாக ஏற்பட்ட குழப்பம், இன்று முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈபிஎஸ் – ஓபிஎஸ், 2021-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களை அதிகாரபூர்வமாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இதனையடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். […]
அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது: அனைத்து நாட்களும் கோல்டன் டேஸ் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் செய்தியார்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ராகுகாலம், எமகண்டம் பார்க்காது. அனைத்து நாட்களும் கோல்டன் டேஸ் […]
முதல்வர், துணை முதல்வருக்கு இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை எனவும், அவர்கள் இருவரும் ஒருதாய் பிள்ளையாக ராமர் லட்சுமணன் போல் உள்ளார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாள் விழா நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், மதுரை மேலமாசி வீதி கதர் விற்பனை நிலையத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து, கதர் ஆடை விற்பனையை துவக்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு […]
முதல்வர், துணை முதல்வர் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்திப்பார்கள் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், சென்னை, ராயபுரத்தில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள். அதன்படி, அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என ஆக்டோபர் மாதம் 7 ஆம் தேதி அறிவிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்த செயற்குழு கூட்டம் நடந்த தினம் முதல் இருந்தே தமிழக […]
துணை முதல்வர் பெயர் இடம்பெறாதது எந்த உள்நோக்கம் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என ஆக்டொபர் மாதம் 7 ஆம் தேதி அறிவிப்பதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். அதனைதொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிக்குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்லாமல், தனது ஆதவாரர்களுடன் அவரின் வீட்டில் ஆலோசனை நடத்தினார். மேலும் இன்று திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சென்னையில் முதல்வர் […]
வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், அதிமுக இந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 46.51 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக பெற்று இருக்கும் வாக்கு சதவீதம் எவ்வளவு முக்கியமானது என்று அரசியல் அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். […]
துணை முதல்வர் மற்றும் 11 எம் எல் ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு வரும் 30 ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபையில் முதல்வர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கடந்த 2017ம் ஆண்டு திமுக கொண்டு வந்தது. அப்போது, அதிமுக கட்சியினர் ஓபிஎஸ் – இபிஎஸ் என்று இரண்டு பிரிவாக இருந்து வந்தனர். சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பின் போது முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். பின்னர் இரண்டு தரப்பினரும் ஒன்றாக இணைந்தனர். முதல்வருக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்துவிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கள்ளிக்குடியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது தமிழக முதல்வர் கூறுகையில் , திமுக கட்சியினர் மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தங்களை மட்டும் சிந்திக்கும் கட்சி தான் திமுக. ஆனால் அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி , நான் உட்பட இங்கே இருக்கும் அனைவரும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.எனவே எங்களுக்கு […]
கிறிஸ்துமஸ் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடி மகிழும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை நாமும் கடைபிடிக்க வேண்டும் என்றும், அதுவே […]