அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தமாட்டோம் என ஈபிஎஸ் தரப்பு உத்தரவாதம் என சிவி சண்முகம் பேட்டி. ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தொடந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஓபிஎஸ் தரப்பு கூறுகையில், அதிமுகவின் அனைத்து பதவிகளையும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தான் நியமிக்க முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது. அதிமுக பொதுக்குழு கூட்டம் […]
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு. அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம் பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுசெயலாளரை சுய விருப்பத்துடன் தேர்ந்தெடுத்ததாகவும், முழுமையான ஆதரவு அளிப்பதாகவும் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களிடம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் affidavit (ஆதரவுக்கான உறுதிமொழி பத்திரம்) அதிமுக தலைமை அதாவது எடப்பாடி பழநிசாமி தரப்பு பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு முன்பு, பொதுக்குழு, […]
அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூடுதல் மனு தாக்கல். அதிமுக அலுவலக மோதல் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அதிமுக […]
அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் காணாமல் போன விவகாரம் தொடர்பாக டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையரிடம் மனு. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் காணவில்லை என ஈபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. அதிமுக அலுவலகத்தில் 3வது மாடியில் இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிசுப்பொருட்களை, முக்கிய ஆவணங்கள் மற்றும் அலுவலக அசல் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் காணவில்லை […]
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டு பொருட்களை எடுத்து சென்றது தொடர்பாக புகார் என சி.வி.சண்முகம் பேட்டி. சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுக தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கோவை, புதுச்சேரி, திருச்சி அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் கொள்ளை, அண்ணா […]
சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபியிடம் புகார். அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக வழக்கறிஞர் பாலமுருகன் தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக வழக்கறிஞர் பாலமுருகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த மே மாதத்திலும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளோம் என்றும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி […]
அதிமுக பொதுக்குழு நேற்று சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியது.ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்,டெல்லி புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,பாஜக சார்பாக குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்வதை முன்னிட்டு அந்த நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்ததால்,டெல்லி செல்கிறேன் என தெரிவித்திருந்தார்.இதனிடையே,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சையால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு என இரு அணிகளாக பிரிந்து,சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் நடைபெற்றது.ஆனால்,பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது என்றும்,மேலும்,அதிமுக அவைத் தலைவர் ஓபிஎஸ் ஒப்புதல் இல்லாமல் தேர்தெடுக்கப்பட்டார் என்றும் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் ஆணையத்தில் மனு: குறிப்பாக,பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவை அவமதித்தாக ஓபிஎஸ் தரப்பு குற்றசாட்டியிருந்தது. இதனிடையே,டெல்லி சென்றுள்ள […]
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அறிவிப்பு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஐந்தில் ஒரு பங்கு பேர் கையொப்பமிட்டு கொடுத்தால், 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்படும். கட்சி சட்ட திட்டங்களை இயற்றவும் திருத்தும் செய்யவும் அதிகாரம் கொண்டது அதிமுக பொதுக்குழு. […]
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம். சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிரும் புதிருமாக மேடையில் அமர்ந்துள்ளனர். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசத்துடன் தெரிவித்தார். பொதுக்குழு தீர்மானங்களை பொன்னையன் முன்மொழிவார் என்று மேடையில் அறிவிக்கப்பட்ட நிலையில், சிவி […]
வன்னியர்களுக்கான 10.5 % இட ஒதுக்கீடில் முழுமையான தரவுகள் இல்லை என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கருத்து. விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம், சமூக நீதி என்று கூறுகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு விவகாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கிறா அல்லது திட்டமிட்டு காலம் தாழ்த்துகிறாரா என்று தெரியவில்லை. சமீபத்தில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 2 முக்கிய பகுதி […]
உங்களுக்கு தைரியம் இருந்தால் பாஜக தலைவரை கைது செய்து பாருங்கள் என்று அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு. திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன்படி, விழுப்புரத்தில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வீடுகளிலியே சோதனையிடுவோம். அதிகாரிகளின் சட்டையை கழட்டுவோம் என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசின் […]
பாமாவுடன் கூட்டணி அமைத்ததால் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பாமாவுடன் கூட்டணி அமைந்ததே முக்கிய காரணம் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாமாவுடன் கூட்டணி அமைத்ததால் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை என்றும் அதனால் பல தொகுதிகளில் தோல்வியை தழுவியதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் […]
பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பதில் கருத்து கூறிய தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி […]
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு பிறகே கூட்டணி கட்சி குறித்து தெரியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் நினைத்தனர் என்றும் […]
பாஜகவால் சிறுபான்மையின வாக்குகள் கிடைக்கவில்லை என்ற சி.வி சண்முகத்தின் கருத்து ஏற்புடையதல்ல என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கேடி ராகவன் கருத்து. விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். நாம் பாஜகவை கூட்டணியாக சேர்த்ததால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்கவில்லை. அதனால்தான் தேர்தலில் தோல்வியடைந்துவிட்டோம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக […]
முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் வயிற்று வலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அமைச்சர் சி.வி. சண்முகத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாதங்களாக கொரோனா குறைந்து வந்த நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பாதிப்பு அதிகமாக இந்தியாவில் பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக பல அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் சி.வி சண்முகத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா […]
இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை ஒருவர் கைப்பற்றுவதாக சொல்லிக்கொண்டு இருக்கிறார். அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். சசிகலாவுக்கு ஒரு எச்சரிக்கை டி.டி.வி. தினகரனிடம் இருந்து உங்களை காப்பாற்றி கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். முதலில் அவர் குடும்பத்தில் ஒற்றுமையை காப்பாற்றிக்கொள்ள சொல்லுங்கள். நான் நிதானமாக பேசுகிறேனா..? என தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு “ஊத்திக்” கொடுத்தார். அவரோட தொழிலே “ஊத்திக்” கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே […]
சசிகலா மீது மீண்டும் டிஜிபியிடம் புகார் அளித்த பிறகு, அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் பேட்டி. சென்னையில் டி.ஜி.பி. திரிபாதி அலுவகத்திற்கு சென்ற, அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டவர்கள் சசிகலா மீது மீண்டும் புகார் அளித்துள்ளனர். சசிகலா பெங்களூரில் இருந்து வரும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது என ஏற்கனவே, புகார் கொடுக்கப்பட்ட நிலையில, இன்று மீண்டும் […]