தேர்தலில் தோல்வியடைந்தாலும் சிக்கன் பிரியாணி விருந்து வைத்த திமுக பிரமுகர் .!

- பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளரான முத்து பெருமாள் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.
- இந்த தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் திருமாறன் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
கடலூர் மாவட்டம் சேந்திரக்கிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து பெருமாள். பரங்கிப்பேட்டை ஒன்றிய திமுக செயலாளரான இவர் சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்ட 25-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார்.
இவரை எதிர்த்து அதிமுக வேட்பாளர் திருமாறன் உள்ளிட்ட பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் திருமாறன் 3 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் முத்துப் பெருமாள் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த மறுநாளே கிராமங்களுக்கு சென்று தனக்கு வாக்களித்த அனைவருக்கும் முத்துப் பெருமாள் நன்றி கூறினார். அதுமட்டுமல்லாமல் அப்போது உங்களுக்கு பிரியாணி விருந்து வைப்பேன் என்றும் கூறியுள்ளார்.
அதன்படி பெரியப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிக்குழி கிராமத்தில் கடந்த இரண்டாம் தேதி சிக்கன் பிரியாணி விருந்து வைத்துள்ளார். இந்த விருந்தில் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விருந்தில் தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025