கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பிறந்தநாள் வாழ்த்து!

Default Image

அன்புத்தோழர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என முதலமைச்சர் முக ஸ்டாலின் ட்வீட்.

தமிழ் திரையுலகில் கடந்த 63 ஆண்டுகளாக தனது கலைப் பயணத்தை மேற்கொண்டு வரும் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனின் 68-ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் இன்று கொண்டாடப்படுகிறது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தீராக் கலைத்தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவருமான அன்புத்தோழர் கமல்ஹாசன் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்