1035 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92 துணை மின் நிலையங்களை திறந்து வைத்த தமிழக முதல்வர்.!

Default Image
  • தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ரூ.1035 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 92 துணை மின் நிலையங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
  • மேலும், பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் வகையில், 1 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை, பொறியாளர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.

தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ரூ.1035 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 92 துணை மின் நிலையங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதனை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் வகையில், 1 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை, பொறியாளர்களிடம் முதலமைச்சர் வழங்கினார்.

இந்நிலையில், சென்னையை அடுத்த வண்டலூரில், 91 கோடியே 80 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வழி பரிமாற்ற மேம்பாலம் உட்பட 11 மாவட்டங்களில், சுமார் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு இரண்டடுக்கும் மேம்பாலம் மற்றும் 15 ஆற்றுப் பாலங்களை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்