மதுரை: கோரிப்பாளையம் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியின் போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் காயமடைந்தனர். தல்லாகுளம் சந்திப்பு முதல் செல்லூர் வரை பாலம் கட்டுமானப் பணி நடைபெற்ற நிலையில், இந்த திடீர் விபத்து அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மதுரை ராஜாஜி அரசு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரா நதியின் குறுக்கே அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்துள்ளது. இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான என மொத்தம் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்ட பட்ட பாலமானது கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், பாதி […]
வாழ்க்கையில் இதுபோன்ற அருமையான இடத்திற்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள். பொதுவாகவே மனம் அமைதியில்லாமல் இருந்தாலும் சரி, நமக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருந்தாலும் சரி வெளியே சுற்றுலா சென்று வந்தால் போதும். மனம் மட்டும் இல்லாமல் உறவுகளும் பலப்படும். இந்தியாவில் இருக்கும் இந்த இடம் அருமையான ஒரு பார்வைக்கு உகந்த இடம். பொதுவாகவே சுற்றி பார்க்க செல்பவர்கள் இயற்கையான இடத்திற்கு செல்வதற்கு விரும்புவார்கள். இந்தியாவில் இயற்கை என்று கூறினாலே கேரளா […]
நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.310.92 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 9 பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திறந்து வைத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.4.2022) தலைமைச் செயலகத்தில்,நெடுஞ்சாலைத் துறை சார்பில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,வேலூர்,விழுப்புரம்,கோயம்புத்தூர். மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 310 கோடியே 92 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆறு இரயில்வே மேம்பாலங்கள்,ஒரு இரயில்வே கீழ்ப்பாலம், ஒரு உயர்மட்டப் பாலம் மற்றும் ஒரு பல்வழிச் சாலை மேம்பாலம் ஆகிய ஒன்பது […]
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதேபோன்று 82 கோடியில் சந்தை சாலை, ஜி.எஸ்.டி. குன்றத்தூர் சாலை, ஆகிய சந்திப்புகளை இணைத்துமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணி அளவில வண்டலூர் பாலத்தையும் 11 மணியளவில் பல்வாரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார். பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு தமிழக […]
உலகின் மிகவும் சவாலான ரயில் போக்குவரத்துக்கு ஏற்ற இரண்டு பாலங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே அமைப்பு. இந்தியாவில் உலகிலேயே மிகவும் சவாலான இரண்டு பாலங்களை நிர்ணயிக்கக்கூடிய முயற்சி நடைபெற்று வருகிறது. ஒன்று ஜம்மு காஷ்மீரில் உள்ள செனாப் நந்திக்கு மேலேயும், மற்றொன்று மணிப்பூரிலும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் பாலம் கட்டும் பணியில் தற்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே போக்குவரத்து துறையில் மிகவும் உயரமான தூண்களுடன் கூடிய பாலத்தினை மணிப்பூரில் உள்ள நோனி ஆற்றின் குறுக்கே கட்டிக் […]
இந்த ஈரடுக்கு பாலத்திற்கு மறைந்த முன்னாள் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா பெயரை வைத்துள்ளார்கள். சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், இந்த ஈரடுக்கு பாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக […]
இன்று காலை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். இந்த ஈரடுக்குபாலம் 7.8 கிலோமீட்டர் நீள தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் […]
டெல்லியில் மக்களவையில் பேசிய விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், சிவகாசியில் சாச்சியாபுரம் மற்றும் திருத்தங்கல் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த முறை இது குறித்து தாம் மக்களவையில் கேள்வி எழுப்பிய போது, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய அமைச்சர் பதில் அளித்ததாக கூறினார். மேலும் இந்த பணியை மத்திய அரசு ஏற்று கொண்டு ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும் என்றும மாணிக்கம் தாகூர் […]
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ரூ.1035 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 92 துணை மின் நிலையங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். மேலும், பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் வகையில், 1 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்ட 18 வாகனங்களை, பொறியாளர்களிடம் முதலமைச்சர் வழங்கினார். தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், ரூ.1035 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, 92 துணை மின் நிலையங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதனை […]
தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது. இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது. Here’s the moment the bridge collapsed. Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV — Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019 தகவல் அறிந்து […]
சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணபுரம் காலனி உள்ளது. இங்கு வாழும் பட்டியலினத்தவர்களுக்கு தனி சுடுகாடு ஒன்று உள்ளது. ஆனால் சுடுகாட்டில் போதிய வசதி இல்லாததால் அவர்கள் இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாக பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருமருங்கிலும் ஆற்றுக்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து பாதையை மறித்து விட்டதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்து நாராயணபுரம் காலனி சார்ந்தவர்கள் இறந்தால் அவ்வழியாக எடுத்துச் செல்ல விவசாயிகள் […]
சாலைக்கு மேல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் இருந்த பாலம் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். மும்பையில் சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் நேற்று மாலை இடிந்து விழுந்தது. சாலைக்கு மேல் ரெயில் நிலையத்திற்கு செல்லும் வகையில் இருந்த நடைமேம்பாலம் இடிந்து விழுந்தது. அதில் சென்று கொண்டிருந்த பயணிகள் விழுந்தனர். மேம்பாலம் விழுந்ததில் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. உடனடியாக […]
டேராடூனில் உள்ள பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.3 பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் மலை பகுதியில் டிராக்டர் ஒன்று சென்றுள்ளது. அந்த டிராக்டர் அங்கிருந்த பாலத்தை கடந்தபோது பாரம் தாங்காமல் பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலை பகுதி என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எத்தனை பேர் டிராக்டரில் சென்றனர் என்பது குறித்த தகவல் தெரியாததால் […]
ஆசியாவின் மிக நீளமான ரயில்வே மற்றும் சாலை போக்குவரத்து பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்கள் வழியாக ஓடும் பிரம்மபுத்திரா நதியின், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பயன்பாட்டிற்காக ஈரடுக்கு போகிபீல் பாலம் புதிதாக கட்டப்பட்டது.இந்த பலம் சுமார் 4 .94 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.இந்த பாலம் கட்டுவதற்கு ரூபாய் 5,920 கோடி செலவு செய்யப்பட்ட இப்பாலம் ஆசியாவின் இரண்டாவது மிகப் நீண்ட பாலம் ஆகும். […]
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே 9 மாதங்களுக்கும் மேல் நடைபெற்று வரும் பாலம் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை – தூத்துக்குடி இடையிலான நான்குவழிச் சாலையில் வல்லநாடு அருகே தாமிரபரணி ஆற்றின் மீது 2 பாலங்கள் கட்டப்பட்டன. கடந்த ஆண்டு இவற்றில் ஒரு பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பல்வேறு இடங்களில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து துளைகள் ஏற்பட்டன. இவற்றை சீரமைக்கும் பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கின. இதற்காக பாலத்தின் சிமெண்ட் […]
மேலூர்: அய்யாஊத்து கண்மாய் கொட்டாம்பட்டி யூனியன், சொக்கம்பட்டி ஊராட்சியில் உள்ளது . எம் சாண்ட் தயாரிக்கும் மணல் தொழிற்சாலை நீர்ப்பிடிப்பு பகுதியில் பாலம் அமைத்து சொக்கம்பட்டி ஊராட்சியில் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கிராம மக்கள் ஆரம்பம் முதல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு இடங்களில் கிராமமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பாலம் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தொழிற்சாலைக்கு செல்வதற்கு இங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதிப்பதுடன், விவசாயமும் அழிந்துவிடும் என்று கிராம மக்கள் குற்றம் […]
சீனாவில் உலகின் நீண்ட மின்பாதைத் திட்டத்தின் ஒரு பகுதியாக மஞ்சளாற்றின் இரு கரைகளிலும் மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுக் கம்பி வடங்களைக் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. சீனாவின் மேற்கில் உய்குர் என்னுமிடத்தில் இருந்து கிழக்கே அன்குய் வரை 3ஆயிரத்து 320கிலோமீட்டர் தொலைவுக்கு ஆயிரத்து நூறு கிலோவோல்ட் திறன் கொண்ட மின்னாற்றலைக் கடத்தும் மின்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடிவடையும். இதன் ஒரு கட்டமாக பையின் என்னுமிடத்தில் மஞ்சளாற்றின் இருகரைகளிலும் […]