மேட்டூர் – சரபங்கா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்..!

Default Image

மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிடும் படி அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால் கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும்.

மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் திருமணிமுத்தாறு ஆகிய ஆறுகளில் இணைப்பதால் 5 மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களும் பயன் பெறும்.

இந்நிலையில் 565 கோடி ரூபாய் மதிப்பிலான சரபங்கா திட்டத்திற்கு சேலம் மாவட்டம் இருப்பாளி கிராமத்தின் அருகேமேட்டுப்பட்டி ஏரியில்  முதலமைச்சர் பழனிசாமி இன்று  அடிக்கல் நாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்