டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். திரு.முத்து மீரான் லெப்பை மரைக்காயர் இறப்பு குறித்து இரங்கல் செய்தி ட்விட்டரில் வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் இன்று(07.03.2021) காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் […]
மாமல்லபுரம் கடற்கரையில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராகவன் ஏற்பாட்டில் 50 டன் மணல் கொண்டு ரூபாய் 20 லட்சம் செலவில் 160 அடி நீளத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணல் சிற்பத்தை கும்பகோணத்தை சேர்ந்த கவின் கல்லூரியின் மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.இந்த மணல் சிற்பத்தை தமிழ் வளர்ச்சி,பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கொடியசைத்து திறந்து வைத்தார்.அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில் […]
முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அருமை தாயார் தவசாயி அம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன்.மாண்புமிகு முதல்வர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் […]
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வரான அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இவரது பிறந்த நாளுக்கு பலரும் வாழ்த்துக்களும் மரியாதையும் செலுத்தி வரும் நிலையில், அண்ணாவின் உருவப்படத்திற்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளனர். மேலும், முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நெஞ்சிலே […]
மக்கள் பணியாளர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி அவதூறு பரப்பும் பூச்சாண்டி வித்தைகளை மு.க.ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், பொருளாதார மீட்பு முயற்சிகளையும், சிறந்த நிர்வாக நேர்த்தியால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதைக் […]
முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் பணி புரியும் காவல்த்துறையினருக்கு கபசுர குடிநீரை வழங்கினார். இந்தியாவில் கொரோனா பரவுவது அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தமிழ்நாட்டிலும் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில், நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இந்த கூட்டம் முடிந்த […]
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகாரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது.எனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று வரை 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் , சுகாதார பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பூதியம் வழக்கப்படும் எனவும் மேலும் பாதிக்கப்பட்டோருக்கு சிகிக்சையளிக்கும் செவிலியர்களுக்கு ,தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒரு மாத ஊதியம் சிறப்பூதியம் வழக்கப்படும் என சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பதில் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறினார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்தியஅரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதை அரசுக்கு தெரிவிக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். மேலும் அவர், அரசின் உத்தரவை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிடும் படி அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால் கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும். மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் […]
மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் வறட்சியான பகுதிகளான எடப்பாடி, வனவாசி, சங்ககிரி மற்றும் கொங்கணாபுரம் பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு திருப்பிவிட வேண்டும் அப்பகுதி மக்கள் பல நாள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் ஏரிகளின் மட்ட அளவுகள் மேட்டூர் அணையின் மட்ட அளவை விட உயரமான உள்ளது. இதனால் கால்வாய் அமைத்து நீர் கொடுக்கமுடியாது. நீரேற்று திட்டத்தின் மூலம் மட்டுமே நீர் கொடுக்கமுடியும். மேட்டூர் அணையின் உபரிநீரை சரபங்கா, வசிஷ்ட மற்றும் […]
தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். பின்னர் குடியரசு தின விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் நாகையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ராஜாவிற்கு வழங்கப்பட்டது. இந்தியா முழுவதும் இன்று 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை மெரினா காந்தி சிலை அருகே தமிழக ஆளுநர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொடியேறினார். இந்த விழாவில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் […]
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் துபாய் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது .தற்போது முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் 28-ம் தேதி சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன் செல்கிறார். அங்கிருந்து செப்டம்பர் 1-ம் தேதி புறப்பட்டு 2-ம் தேதி நியூயார்க் செல்கிறார்.அங்கு கலிபோர்னியா கால்நடை பண்ணை பார்வையிடுகிறார். பின்னர் அமெரிக்காவில் இருந்து திரும்பும் […]