சண்முகநாதன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் முக ஸ்டாலின்!

Chief Minister Stalin pays homage to former Chief Minister Karunanidhi's aide Shanmuganathan for the 2nd time.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுக்கு 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் கோ.சண்முகநாதன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சண்முகநாதன் மீது அதீத பாசத்தால், இரண்டாவது முறையாக நேற்றிரவு மீண்டு அவரின் உடலுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். நேற்று மாலை அஞ்சலி செலுத்திய நிலையில், இரவில் மீண்டும் அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் மறைந்ததை அடுத்து அவரது இறுதி ஊர்வலத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இன்று பிற்பகல் 12 மணியளவில் சண்முகநாதன் உடலுக்கு மயிலாப்பூர் இடுகாட்டில் இறுதி சடங்கு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.