#BREAKING: திமுக எம்பி ஆ.ராசா மீது மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு..!

Central Crime Branch police have registered a case against DMK MP A. Raja in 2 divisions Parliament and Deputy General Secretary of the DMK

திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா இந்த மாதம் மூன்றாம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீது அவதூறு பரப்பும் வகையில் பேசியாவும்,  கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் கூறி நேற்று மத்திய குற்றப்பிரிவு காவல் ஆணையர் அலுவலகத்தில் செல்வகுமார் என்பவர் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் ஆ.ராசா மீது இரண்டு பிரிவு கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.