நாளை கேன் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது.!

கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என  பிரதமர் மோடி அனைத்து

கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என  பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைவரும்  வீடுகளிலேயே இருக்க வேண்டும் .மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுக்க   பணியாற்றுவோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வீட்டில் இருந்து கைகளை தட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இதனால்  நாளை தமிழகத்தில் அனைத்து கடைகள், ஹோட்டல்கள் , டாஸ்மாக் மதுபான கடைகள்  நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.