சென்னையில் நாளை அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நாளை காலை 10.35 மணிக்கு அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது. அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆய்வு செய்தனர். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி வேலுமணி, தங்கமணி ஆகியோர் […]
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, […]
சென்னை உட்பட 25 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதற்கு இடையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு மிதமான முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரிப்பின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு உணவகங்கள் மூடப்படும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில்,மே 10-ம் தேதி முதல் 24ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக வெளியே சுற்றுவதால்,24-ஆம் தேதி முதல் 31-ஆம் […]
பீகார் மாநிலத்தில் நடந்து வரும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி தற்போது முடிவடைவதால், அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே கடந்த 28-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடந்தது. தற்போது 2-ம் கட்ட தேர்தல், நாளை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று பிரதமர் மோடி 4 […]
நாளை முதல் தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவக்கவுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மொத்தமாக 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். கொரோனா வைரஸ் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை 48 லட்சம் விடைத்தாள்கள், 200 மையங்களில் திருத்தும் பணி தொடங்கவுள்ளது. தமிழகத்தில் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகமாக சென்னையில் தான் […]
நாளை மேற்கு வங்கத்தில் உள்நாட்டு விமான சேவை தொடங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25 -ம் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் பஸ், ரயில், விமானசேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், நாளை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி […]
கொரோனா வைரஸ் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை ஒருநாள் சுய ஊரடங்கு நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி அனைத்து பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும் .மேலும் மாலை 5 மணிக்கு அனைவரும் கொரோனா வைரஸ் தடுக்க பணியாற்றுவோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் வீட்டில் இருந்து கைகளை தட்ட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதனால் […]
நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இஷாந்த் ஷர்மா காயம் காரணமாக விலகி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா விலகி உள்ளார்.அனுபவ வீரர் இஷாந்த் ஷர்மா கணுக்கால் காயத்திலிருந்து மீண்டு நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடினார். இஷாந்த் சர்மா முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் மீண்டும் வலி ஏற்பட்டதால் இரண்டாவது போட்டியில் […]
தளபதி ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்தில் இருந்து குஷிப்படுத்தும் வகையில் புதிய அப்டேட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் புதிய படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனும் உள்பட ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் […]
ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகின்றது இந்திய விஞ்சானத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனையை நிகழ்த்தி வருகின்றது இஸ்ரோ.இந்நிலையில் இஸ்ரோ தகவல் தொடர்பு வசதிக்கு பயன்படுத்த ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்புவது என்ற முடிவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தகவல் தொடர்பு வசதிகளை பெருக்கும் வகையில் 40வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ஜிசாட்-31 என்ற செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ உருவாக்கி வந்தது.2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்ட ஜிசாட்-31 செயற்கைகோள் நாளை விண்ணுக்கு அனுப்பப்பட இருக்கின்றது.இதன் ஆயுட்காலம், 15 ஆண்டுகள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பரப்பரப்பான சூழலில் கர்நாடக மாநில சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறுகின்றது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி இணைந்து 8 மாதங்களாக ஆட்சி நடத்தி வருகின்றன. இரண்டு கட்சி எம்எல்ஏக்களுக்கு கருத்து வேறுபாடுகள்இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து அதிருப்தி எம்எல்ஏக்களை இழுக்க பாஜக தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்படுகின்றது . காங்கிரஸ் , மதச்சார்பற்ற என இரண்டு கட்சியை சார்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களையும் இழுக்க தங்கள் பக்கம் இழுக்க பாஜக மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் பரபரப்பான சுழலில் கர்நாடக மாநில சட்டமன்ற கூட்டம் நாளை கூடுகிறது. […]
மலேசியாவில் புதிய மன்னர் யார் என்பதை முடிவு செய்ய நாளை அந்நாட்டில் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . மலேசிய மன்னர் சுல்தான் முகம்மது அண்மையில் தனது அரசு பதவியில் இருந்து விலகினார். 50 வயது கடந்த மன்னர் தனனை விட வயதில் மூத்த ருஷ்ய அழகியை திருமணம் செய்துகொண்டதால் சர்சை எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகியதாக கூறப்படுகிறது .இந்நிலையில் மலேசியாவின் அடுத்த புதிய மன்னரை தேர்ந்தெடுக்கு நடைமுறை நடந்து வருகின்றது. நிலைய தினம் இதற்கான முக்கிய கூட்டம் நடைபெறுகின்றது.இந்த கூட்டத்தில் மலேசிய புதிய […]
2017 – 2018 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், நாளையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், கடந்த 2017-2018 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் தாக்கல் செய்பவர்களுக்கு இன்று மாலை வரை, 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்ட அனுமதி […]
நாளை முதல் மின்தடையால் தமிழகம் இருளில் முழ்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மின்சார வாரியம் அனல் மின் நிலையங்களில் 1.85 லட்சம் டன் நிலக்கரி மட்டும் இருப்பு வைத்துள்ளது.இதனால் நாளை முதல், கிராமங்களில், அதிக நேரம் மின் தடை செய்ய வேண்டிய கட்டாயம் மின்சார வாரியத்திற்கு உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் இருந்து, தமிழகத்திற்கு நிலக்கரி வரத்து பாதித்துள்ளதால், நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் மின் நிலையங்களில் முழு அளவில் உற்பத்தி […]
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மேலும் ஒரு விண்கல் பூமியை மிக நெருக்கமாகக் கடந்து செல்லவிருக்கிறது. 15 முதல் 40 மீட்டர் வரையிலான அளவு கொண்ட இந்த சிறிய விண்கல், பூமிக்கு 64,000 கி.மீ. தொலைவில் வரும் சனிக்கிழமை கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 2018 சிபி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கல் பூமியைக் கடந்து செல்வதால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக, பூமிக்கு அருகே சூரியனைச் சுற்றி வரும் நடுத்தர […]