#BREAKING: இந்த இரு இடங்களுக்கு இடையே கரையே கடக்கும் புரேவி புயல்.!

The deep depression formed in the Bay of Bengal is moving at a speed of 13 km. In this case, Buravi Cyclone develops in 12 hours.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், 12 மணி நேரத்தில் புரேவி புயல் உருவாகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 11:30 மணி நிலவரப்படி கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கு சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும், இலங்கை திரிகோணமலையில் இருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

அடுத்து வரும் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறுகூடும் என்றும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலையில் அங்கிருந்து மன்னார் வளைகுடா வழியாக 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி- பாம்பன் இடையில் தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அந்த வகையில், புயல் கரையை கடக்கும் போது 75-95 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அதித கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.