Tag: HeavyRains

#BREAKING: தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழை – வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு […]

#Chennai 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.அதன்படி,நீலகிரி,கோவை, திருப்பூர்,திண்டுக்கல்,தேனி,ஈரோடு,கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம், நாமக்கல்,கரூர்,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான முன்னறிவிப்பு: […]

#TNRain 4 Min Read
Default Image

#Alert:தமிழகத்தில் இன்றும்,நாளையும் கனமழை;இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்- வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. மேலும்,நாளை நீலகிரி,கோயம்புத்தார்,தேனி,திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி,திருநெல்வேலி,ஈரோடு,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும்,நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 37 […]

#TNRains 4 Min Read
Default Image

#RainAlert:3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை;50 கி.மீ வேகத்தில் சூறாவளி – வானிலை மையம் அறிவிப்பு!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,இன்று தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி,கோயம்புத்தூார்,தேனி, திண்டுக்கல்,திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,ஈரோடு,நாமக்கல்,சேலம், தருமபுரி,கிருஷ்ணகிரி,திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதைப்போல நாளை நீலகிரி,கோயம்புத்தூர்,தேனி,திண்டுக்கல், திருப்பூர்,தென்காசி,விருதுநகர்,கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை […]

#TNRains 5 Min Read
Default Image

#RainAlert:மக்களே…இடி மின்னலுடன் இன்று மழை;சூறாவளிக் காற்று – வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,நீலகிரி,கோவை,திருப்பூர்,ஈரோடு,சேலம்,நாமக்கல்,கரூர், திருச்சி,பெரம்பலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே சமயம்,தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 […]

#TNRain 4 Min Read
Default Image

#Breaking:இன்று 16 மாவட்டங்களில் மிரட்டப் போகும் கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர்,அரியலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், நீலகிரி,கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழ்நாடு,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அடித்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை […]

#Rain 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் தொடர் கனமழை – இதுவரை மழைக்கு 136 பேர் உயிரிழப்பு!!

மகாராஷ்டிராவில் மழையால் ஏற்பட்ட விபத்துகளில் நேற்று மாலை வரை 136 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையால் ராய்கட், சத்தாரா, கோந்தியா, சந்திரபூர், ரத்னகிரி, புனே, பால்கர், நாக்பூர் போன்ற  மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்குகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்பு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு, குடியிருப்பு வீடுகள் […]

#Maharashtra 4 Min Read
Default Image

கனமழையால் காரைக்கால் பள்ளிகளுக்கு விடுமுறை.!

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.அதிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது .அந்த நிலையில் சமீபத்தில் இந்த புரேவி புயலால் பெய்த மழை காரணமாக […]

HeavyRains 3 Min Read
Default Image

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது.!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடாவிலேயே நீடித்து வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு கடலோரா மாவட்டங்களில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் பேசுகையில், மன்னர் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு […]

#NorthEastMonsoon 3 Min Read
Default Image

தொடர் மழையால் தண்ணீரில் மூழ்கிய சிதம்பரம் நடராஜர் கோயில்.!

புரேவி புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் சிதம்பரம் நடராஜர் கோவிலின் உள்பகுதி தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வங்கக்கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், புயலாக வலுப்பெற்று, இலங்கை திரிகோணமலை பகுதியில் நேற்று முன்தினம் கரையை கடந்தது.இந்த புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது .இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும் பரவலாக பெய்து வரும் கனமழையால் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலின் உள்பகுதி முழுவதும் தண்ணீரால் மூழ்கியுள்ளது […]

ChidambaramNatarajartemple 2 Min Read
Default Image

#BREAKING: இந்த இரு இடங்களுக்கு இடையே கரையே கடக்கும் புரேவி புயல்.!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்நிலையில், 12 மணி நேரத்தில் புரேவி புயல் உருவாகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 11:30 மணி நிலவரப்படி கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கு சுமார் 860 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும், இலங்கை திரிகோணமலையில் இருந்து 460 கிலோ மீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. அடுத்து வரும் 12 மணி நேரத்தில் […]

BureviCyclone 3 Min Read
Default Image

#நிவர் புயல்: கொட்டி தீர்த்த கனமழை., தாம்பரத்தில் 31 செ.மீ மழை பதிவு..!

நிவர் புயல் கரையை கடக்கும் போது தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர் புயல், அதிதீவிர புயலாக கரையை கடந்து அதன்பின் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரியில் இரவு 2.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது. இந்நிலையில், தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை தாம்பரத்தில் 31செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல், விழுப்புரத்தில் 28 செ.மீ. மேலும் புதுச்சேரியில் 23.7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனையடுத்து, புயல் கரையை கடந்த பிறகு பல்வேறு இடங்களில் பலத்த […]

HeavyRains 2 Min Read
Default Image

செம்பரம்பாக்கம் பகுதிகளில் நாளை வரை 20 செ.மீ மழை பெய்யும்.!

செம்பரம்பாக்கம் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இன்று காலை முதல் நாளை காலை 6 மணி வரை 20 செ.மீ மழை பெய்யும் என்று மத்திய நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி வாய்க்கால் செல்லும் கிராமத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிற நிலையில், சென்னையில், செம்பரப்பாக்கம் ஏரியில், 1000 கனஅடி நீர் திறக்கப்படவுள்ளதாகவும், நீர்வரத்தை பொறுத்து படிப்படியாக உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்றும் […]

ChembarambakkamLake 2 Min Read
Default Image

நிவர் புயல்: இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நிவர் புயல் காரணமாக இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிவர் புயல் : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இன்று காலை புயலாக வலுவடைந்து நிவர் புயல் தீவிர புயலாக மாறி, காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே இன்று பிற்பகலில் […]

#ChennaiRains 3 Min Read
Default Image

#HeavyRainaAlert: 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது, அதில் 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன் படி, கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. மிக கனமழை: தற்போது, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கைப் பகுதியில் நிலவும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 […]

#Weather 3 Min Read
Default Image

#HeavyRains: தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, குமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, 4 ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். அந்த வகையில், கோவை, சிவகங்கை, விருதுநகர், தேனி, புதுக்கோட்டை மற்றும் தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, திருப்பூரில் ஆகிய 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது அதே […]

#Weather 2 Min Read
Default Image

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் […]

#MeteorologicalDepartment 2 Min Read
Default Image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஹைதராபாத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு .!

இரண்டு நாட்கள் பலத்த மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தில் இன்று இரவு அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், லேசான முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை நகரத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஹைதராபாத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நீர் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால், தேவையான […]

#Flood 2 Min Read
Default Image

ஆந்திராவில் கனமழை எதிரொலி : வீடு இடிந்து பெண் ஒருவர் பலி!

ஆந்திராவில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா எனும் பகுதியில் ஏற்பட்ட அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நேற்று ஆந்திராவில் 24 சென்டிமீட்டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது. மேலும் கடலில் நின்று கொண்டிருந்த கப்பல்கள், படகுகள் ஆகியவை கரைக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமாக வலுப் பெற்றதால் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நேற்று […]

aandra 3 Min Read
Default Image

பாகிஸ்தானில் கனமழையால் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.!

பாகிஸ்தானில் கனமழை காரணமாக 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இன்று பெய்த கனமழை காரணமாக 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கூரை இடிந்து விழுந்த சம்பவங்களால் பல வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்து, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உள்ளூர் ஊடகங்களுக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. லாகூரின் ஹர்பன்ஸ்புரா பகுதியில் ஒரு பழைய வீட்டின் கூரை இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்து, 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஷேகுபுரா மாவட்டத்தில் ஒரு வீட்டின் […]

#Pakistan 4 Min Read
Default Image