#BREAKING : போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு...! டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் அனுமதி இல்லை...!

தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த

தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

ஜூன் 14-ம் தேதி போக்குவரத்துக்கு  தடை நீடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ஆனால், தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் ஜூன் 14-ம் தேதி வரை போக்குவரத்துக்கு  தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.