சென்னை : ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.372 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பயனாளிகளுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை வழங்க இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து, டிசம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் என […]
சென்னை : தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளில் மினி பஸ் சேவை வழங்கப்படாது. இதற்கேற்ப, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும். மினி பஸ் சேவைகள் எந்தெந்த வழித்தடங்களில் […]
மது அருந்திவிட்டு பேருந்து இயக்குவது கண்டறியப்பட்டால் பணி நீக்கம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமீப காலமாக ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர் உடன் நடத்துநர்களில் சிலர் தங்களது பணியின் பொழுது மது அருந்திய நிலையில் பணிபுரிவதாக புகார் பெறப்படுகிறது. மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றமாகும். மது அருந்திய நிலையில் பயணிகளிடையே நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுவதுடன், பயணிகளுக்கு நமது கழகத்தின் மீதான நம்பிக்கை குறைவதுடன் தொடர்ந்து […]
கூடுதல் கட்டணம் வசூல் செய்ய கூடாது என போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை. தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் கூடுதலாக கட்டணங்கள் வசூல் செய்வதாக இன்று காலையில் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையிலான குழுவினர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். […]
பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு. அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா கட்டாயம் பொருத்தப்படும் என்றும் பள்ளி, கல்லூரி வாகனத்தில் கேமரா பொருத்துவதற்கான ஆய்வும் கூடிய விரைவில் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பள்ளி, […]
ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், 23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 28-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி […]
தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. ஜூன் 14-ம் தேதி போக்குவரத்துக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு […]
சென்னையில் தளர்வுகள் தரக்கூடாது என்றும் பொது போக்குவரத்துக்கு பஸ் ரயில்களை இயக்க கூடாது எனவும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில், ஊரடங்கை நீடிப்பதா? இல்லை தளர்வு செய்யலாமா? என்பதை குறித்து மருத்துவ நிபுணர்களுடன் இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை முடிந்தபின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவ குழு பிரதிநிதியான ஐசிஎம்ஆர் துணை இயக்குநர் பிரதீப் கவுர், தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா அதிக பாதிப்பு […]
புதுவையிலிருந்து இருந்து தமிழகத்தின் 2 மாவட்டங்களை கடந்து காரைக்கால் பகுதிக்கு புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பேருந்துகள் சேவை தொடங்கியது. புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கில் பல தளர்வுகளை புதுச்சேரி அரசாங்கம் அறிவித்தது. அதில், குறிப்பாக மதுக்கடைகள் மற்றும் புதுச்சேரிக்குள் பேருந்துகளை இயக்குவது என அறிவிக்கப்பட்டு நேற்று முதல் உள்ளூர் பேருந்துகள் பல்வேறு வழிதடங்களில் இயக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாநிலத்தின் ஒரு பகுதியான […]
பஸ் பயணம் தொடர்பாக பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன? இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பராவலை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் சுவாமி, ஊரடங்கு முடிந்த பின்னர், அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும், ஓட்டுனர், நடத்துனர், பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட […]
கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படவில்லை. இந்நிலையில், கேரளா போக்குவரத்துத்துறை அமைச்சர் சுசீந்தரன் அவர்கள், கேரளாவில் பொது போக்குவரத்துக்காக பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா அதிகம் இல்லாத பகுதிகள் மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் […]
கர்நாடகாவில் பஸ், ரயிலை இயக்க அனுமதி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் […]
தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஆட்சியர்கள் ஏற்படுத்தி தர வேண்டும் – முதல்வர் வலியுறுத்தல். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ, அந்த அளவிற்கு […]
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், கட்டுப்பாடுகளுடன் தொழில்துறை துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி […]
கொரோனா தடுப்பிற்கு ஒருநாள் ஊதியத்தை வழங்க உள்ளனர் போக்குவரத்து ஊழியர்கள். கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.அதன்படி பல்வேறு தரப்பினரும் நிதி உதவி வழங்கி […]
போக்குவரத்து தொழிலாளருக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் , கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கவும் ,25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மேலும் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதையெடுத்து […]
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில் பாலாஜி அதிமுகவில் கடந்த 2011-2015-ம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர். ஜெயலலிதா இறந்த பின்னர் அமமுக கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.இதையெடுத்து அமமுக கட்சியிலிருந்து விலகி ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தார்.இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக குற்றபிரிவு […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக மக்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.அதில் சில பேருந்துகளில் நடத்துனர்கள் இல்லாமல் இயங்கி வருகிறது.டத்துநர் இல்லா பேருந்துகளை நிறுத்த வேண்டும். நடத்துனர் இல்லா பேருந்து என்ற பெயரில் பயணிகளின் உயிரோடு விளையாடுவதை கண்டிப்பது, பதவி இறக்கம், பணியிடை மாற்றம் என்ற அடிப்படையில் தொழிலாளர்களை பழிவாங்குவது கூடாது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்டோன்மென்ட் அரசு போக்குவரத்து டெப்போ முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் பல்வேறு நபர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.