#BREAKING: பிப்.13ல் முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.!

Tamil Nadu Cabinet meeting will be held on the 13th under the chairmanship of Chief Minister Palanisamy.

தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் வரும் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 110-ன் கீழ் முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 15வது சட்டப்பேரவையின் இறுதி கூட்டத்தொடர் வருகின்ற 22-ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த இறுதி கூட்டத்தொடரில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கமானது ஆகும்.