#BREAKING: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

A case has been registered against 2 teachers for sexually harassing students at a government school near Paramakudi in Ramanathapuram district.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அப்பள்ளி ஆசிரியர் ராமராஜ்யை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தந்த புகாரில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வலவனை காவல்துறையினர் தேடி வருகின்றன.

மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும், இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும் சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் வசந்தகுமார் அளித்த புகாரின் பேரில் சம்மந்தப்பட்ட 2 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.