தெலுங்கானா : பொதுவாகவே சிறிய வயதுடையவர்களுக்கு பேய் என்ற பெயரை கேட்டாலே பயந்துவிடுவார்கள். பின் வளர வளர அப்படி எல்லாம் இல்லை என்பது போல சொல்லி கொடுத்தால் மட்டும் தான் அவர்கள் அந்த விஷயத்திற்கு பயப்படாமல் இருப்பார்கள். அப்படி தான் தெலுங்கானாவில் உள்ள பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பேய் இல்லை என்பதை எடுத்து உரைத்து கூறி தைரியம் வர வைக்கும் வகையில் ஒரு செய்யலை செய்து இருக்கிறார். ஆதிலாபாத் ஜைனாத் மண்டலில் உள்ள ஆனந்த்பூர் தொடக்கப் பள்ளி […]
குடும்ப வறுமையின் காரணமாக பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர். தெலுங்கானாவில் நவீன் என்ற மாணவன் வீட்டு வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் இதனை அறிந்த ஆசிரியர் பிரவீன் மாணவனின் வீட்டிற்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மேலும், கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி மாணவனை மீண்டும் படிக்க வருமாறு அழைத்துள்ளளார். பள்ளிக்கு வராதா மாணவனின் வீடு தேடி சென்று பள்ளிக்கு வருமாறு அழைத்த ஆசிரியருக்கு பலரும் […]
மாணவியை மருமகளாக்க நினைத்த ஆசிரியையை பணியிடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவு. திருப்பூர் மாவட்டம் காரதொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாந்தி. இவர் அந்த பள்ளியில் பயின்ற 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை, தனது மகனிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். மேலும் அந்த மாணவியை மருமகள் என உறவுமுறை கூறி அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து, தனது மகனிடம் பேசவில்லை என்றால், மதிப்பெண்ணில் கைவைப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையயடுத்து, இது தொடர்பாக மாணவி […]
தன் பள்ளி ஆசிரியையை கட்டிப்பிடித்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்க்கும் சிறுவன் வைரலான வீடியோ!! ஒரு சிறுவன் தான் செய்த தவறுக்காக தனது வகுப்பு ஆசிரியரிடம் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், சிறுவன் தனது ஆசிரியரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கிறான், ஆனால் ஆசிரியர் ஏற்க மறுக்கிறார் சிறிது விவாதத்திற்கு பிறகு ஆசிரிரை கட்டிப்பிடித்தும் முத்தம் கொடுத்தும் சமாதானபடுத்தும் காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் […]
உத்திர பிரதேசத்தில், 2 ஆம் வகுப்பு தலித் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்து துன்புறுத்திய ஆசிரியர். உத்திரபிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் நேற்று(செப் 6) 2 ஆம் வகுப்பு படிக்கும் ஏழு வயது தலித் மாணவனை ஆசிரியர் அடித்ததாகவும், மாணவனின் தலையை தரையில் தேய்த்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஆசிரியர் மாணவனை அடித்து, தலையை தரையில் தேய்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் வலது கண்ணுக்கு அருகில் காயம் […]
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது என அறிவுறுத்தல். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதிற்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 38 மாவட்டங்களில் இருந்து 386 ஆசிரியர்களை விருதுக்கு தேர்வு செய்ய புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது அதில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் பெயரை பரிந்துரைக்கக்கூடாது. அரசியல் தொடர்பில் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க கூடாது. தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய […]
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு. அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உயர்நீதிமன்ற கிளையின் அறிவுறுத்தலை திறந்து திருத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை தந்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணியாற்றி வந்தவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம், […]
தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கான பணிகளை நிறுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த வாரம் பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளிகளில் 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும், பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக்குழுவே மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாகக்குழுவினர் தாங்கள் விரும்பக்கூடியவர்களை தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளது. […]
தமிழகத்தில் கடந்த 01.08.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3000 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3000 ஆசிரியர்களுக்கு மேலும் 1 வருடம் பணியை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.குறிப்பாக,அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதன் காரணமாக ஆசிரியர்களின் பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,3000 ஆசிரியர்களுக்கு ஊதியம்,மற்றும் இதர படிகளை வழங்கிடவும் […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அப்பள்ளி ஆசிரியர் ராமராஜ்யை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தந்த புகாரில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வலவனை காவல்துறையினர் தேடி வருகின்றன. மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும், இரட்டை […]
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், மாணவி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் […]
கர்நாடகா மாநிலத்தில் குப்பை கூடையை வைத்து ஆசிரியரை தாக்கிய மாணவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள தாவணகெரே மாவட்டம் சன்னகிரி நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் ஆசிரியரை தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாணவர் ஒருவர் குப்பைத்தொட்டியை வைத்து ஆசிரியரை தாக்குவது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் கண்டனத்தை பெற்றுள்ளது. ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்ததும் குட்கா பொருட்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து ஒழுக்கத்தை கடைபிடிக்க […]
கோவை மாணவி தற்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் மிதுனை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க கோவை போக்சோ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் மாணவியின் கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. […]
நான் எந்த தவறும் செய்யவில்லை என தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர் கடிதத்தில் எழுதியுள்ளார். கரூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த 19 ஆம் தேதி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். மேலும் உயிரிழந்த மாணவி எழுதி வைத்த கடிதத்தில் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளி […]
சத்தீஸ்கரில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பள்ளி நேரத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டார். போதையில் இருந்த ஆசிரியரின் வீடியோவும் இணையத்தில் வெளியானது. கோர்பாவில் உள்ள காரி மாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில் பள்ளி ஆசிரியர் ஒருவர் போதையில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பள்ளி நேரத்தில் அந்த ஆசிரியர் தனது அறையில் குடித்து […]
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியத்தில்(TN TRB Recruitment 2021) வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB), முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / கணினி பயிற்றுவிப்பாளர் பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பி.ஏ.எட், பி.எஸ்சி, பி.எட், பி.பிஎட்,எம்.பிஎட் (B.A. Ed/B.Sc/B.Ed/B.PEd/M.PEd) முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். வேலை: முதுகலை உதவியாளர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / கணினி பயிற்சியாளர். மொத்த காலியிடங்கள்: 2207. கல்வித் தகுதி: […]
11 ஆம் வகுப்பு மாணவி முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் பூசிய 56 வயது ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரேலி எனும் பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் பணியாற்றி வரக்கூடிய 56 வயதுடைய ஆசிரியர் ஒருவர், பயிற்சி மையத்தில் வைத்து ஆசிரியர் தினத்தன்று கேக் வெட்டிய பொழுது. அருகில் இருந்த 11ஆம் வகுப்பு படிக்க கூடிய மாணவியின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக்கை பூசியுள்ளார். அந்த பெண் தன்னை விட்டு […]
உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் ஒரு மைனர் பெண்ணின் முகத்தில் வலுக்கட்டாயமாக கேக் தடவிய ஆசிரியர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு தொடக்க ஆங்கில வழிக்கல்வி பள்ளியில் 57 வயதான ஆசிரியர் ஒருவர்,பள்ளியில் பயிலும் ஒரு மைனர் பெண் மாணவியை பிடித்து முகத்தில் கேக் தடவியுள்ளார்.அந்த மாணவி தன்னை விடுவித்துக் கொள்ள போராடியுள்ளார்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வைரல் வீடியோவில்,ஆசிரியர் அந்த பெண்ணை பிடித்து இழுத்து பின்னர் அவரது முகத்தில் […]
சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 11 ஆம் வகுப்பில் மாணவர் சேர்க்கை என்று தொடங்கி இருக்கிறது. கொரோனா குறைந்த 27 மாவட்டங்களில் இன்று மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இன்று காலை பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருந்தார். மீதமுள்ள 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்ததன் பின்பாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்து இருந்தது. […]
சென்னை மாவட்ட பள்ளி ஆசிரியர்கள் ஜூன் 20 குழந்தை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி தான் மத்திய,மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றனர். இதனால், மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள […]