#BREAKING: ஆர்எஸ்எஸ் பேரணி – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Default Image

RSS ஊர்வலத்துக்கு அனுமதி வழங்காத இடங்களில் உளவுத்துறை அறிக்கைய ஆராய்ந்த பிறகு உத்தரவு.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது தொடர்பாக 47 இடங்களுக்கு உளவுத்துறை அறிக்கையை ஆராய்ந்து பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 47 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துவது குறித்து வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

அக்டோபர் 2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லை என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தொடரப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2-நம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால், சட்ட – ஒழுங்கை கருத்தில் கொண்டு ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இதை எதிர்த்து உயரதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக தமிழக காவல்துறை விரைவில் முடிவெடுத்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு அனுமதி அளிக்குமாறு மாவட்ட எஸ்.பி.க்களுக்கு தமிழக டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.

இந்த நிலையில், அக். 2-ல் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காத நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விவகாரத்தில், காவல் துறை அனுமதி வழங்காத 47 இடங்களில் அனுமதி வழங்குவது தொடர்பாக வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனிடையே, கடலூர், பெரம்பலூர் கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்திலும் வழங்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்பின், 3 இடங்களில் அனுமதி வழங்கப்பட்டன. 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அனுமதி வழங்க தயார், மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது. நவ.6ல் பல இடங்களில் கனமழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்