#BREAKING: அமைச்சர் ஐ.பெரியசாமியின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்க அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு உத்தரவு.
வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது வீட்டுமனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை ரத்துசெய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம் வழக்கை சந்திக்கவும் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடு இருந்ததாக கூறி, கடந்த 2013-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் ஐ.பெரியசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை தற்போது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, வழக்கை சந்திக்க உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.